‘டோரதி’ முதல் ‘தி பாரடைஸ்’ வரை: இந்த வார தியேட்டர் ரிலீஸ் பட்டியல்

‘டோரதி’ முதல் ‘தி பாரடைஸ்’ வரை: இந்த வார தியேட்டர் ரிலீஸ் பட்டியல்
Updated on
3 min read

நானியின் ‘பாரடைஸ்’ முதல் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ வரை ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் பல படங்கள் திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாக இருக்கின்றன. அதன் பட்டியல் இது.

தி பாரடைஸ்: ஸ்ரீகாந்த ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தி பாரடைஸ்’. இந்த ஆக்‌ஷன் படத்தில் மோகன் பாபு, ராகவ் ஜுயல், கயாது லோஹர், சம்பூர்ணேஷ் பாபு, சோனாலி குல்கர்னி உள்ளிட்டோருடன் கவுரவத் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷும் நடித்தள்ளார். இந்தத் தெலுங்கு படம் செப்டம்பர் 24-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

ஆரம்: ராஜேஷ் பரமேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மலையாளப் படம் ‘ஆரம்’. இந்தப் படத்தில்  சைஜு குருப், சித்திக், அஸ்கர் அலி, ஷாகீன் சித்திக், ஷரித் விஜயகிருஷ்ணன், சுதீஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் செப்டம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது.

அன்பில் அவன்: அசோக் செல்வன் நடிப்பில் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அன்பில் அவன்’. இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், டெல்லி கணேஷ், சபு மோன், அப்​துல் சமத், கதிர் பாலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் கலந்த காதல் கதையான இந்த தமிழ்ப் படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.

மீசைய முறுக்கு 2: ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்திருக்கும் படம் ‘மீசைய முறுக்கு 2’. இந்தப் படத்தில்  சைத்ரா ஆச்சர், கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன்  ஹர்​ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடு​களம் நரேன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தமிழ்ப் படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாக இருக்கிறது.

ஸ்பார்க்: மஹந்தேஷ்  ஹந்த்ரால் இயக்கத்தில் உருவாகி இருக்கும்  ‘ஸ்பார்க்’ படத்தில் நிரஞ்சன் சுதிர்ந்த்ரா, பாவனா, பிரேம் குமார், ரச்சனா இந்தேர், தர்மன்னா கடுர், ரமேஷ் இந்திரா, அபேய்  வஷிஸ்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தக் கன்னடப் படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.

அமானுஷிகம்: நிதீஷ் கே நாயர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மர்ம த்ரில்லர் படம் ‘அமானுஷிகம்’. இந்தப் படத்தில் ஜோமோன் ஜோஷி, ராஜேஷ் பரவூர் கிரண் ராஜ், கொடசநாடு கனகம், கோப்ரா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த மலையாளப் படம் செப்டம்பர் 25-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

லெனின் பாண்டியன்: பி.பாலச்சந்திரன் இயக்கி இருக்கும் படம் ‘லெனின் பாண்டியன்’. கங்கை அமரன் ஷ்ரிதா ராவ், ரோஜா, ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், தர்ஷன் கணேஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் தமிழ்ப் படம் செப்டம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது.

தூமகேது: சுதி மேடிசன் இயக்கி இருக்கும் நகைச்சுவைப் படம் ‘தூமகேது’. இப்படத்தில் சஜின் கோபு, நிகிலா விமல், கணபதி, ஷின் டாம் சாக்கோ, சித்தார்த் பரதன், மஞ்சு பிள்ளை உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த மலையாளப் படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.

டோரதி: இளையராஜா இசையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘டோரதி’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த், முத்துகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தமிழ்ப் படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.

அனுமான பட்சி: விமல் கிருஷ்ணா இயக்கி இருக்கும் நகைச்சுவை த்ரில்லர் படம் ‘அனுமான பட்சி’. இதில் ராக் மயூர், மெர்லின் பிலிப், பிரின்ஸ் சிசில், பிரம்மாஜி, ராசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தெலுங்கு படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.

கல்யாணம் காமனீயம் ஜீவிதம்: ரவி லோகிரெட்டி இயக்கி இருக்கும் நகைச்சுவைத் திரைப்படம் ‘கல்யாணம் காமனீயம் ஜீவிதம்’. இந்தப் படத்தில் கான் துரானி, ஷாஹிதி அவஞ்சா, உதய் புலிமே, சத்யானந்த் லங்கா, காக்கிநாடா நானி, சோனி ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தெலுங்கு படம் செப்டம்பர் 24-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

‘டோரதி’ முதல் ‘தி பாரடைஸ்’ வரை: இந்த வார தியேட்டர் ரிலீஸ் பட்டியல்
நடிகை அம்பிகா ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாக தங்கை ராதா புகார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in