ரிவெஞ்ச் திரில்லராக உருவாகியுள்ள ‘ரேஜ்’

ரிவெஞ்ச் திரில்லராக உருவாகியுள்ள ‘ரேஜ்’
Updated on
1 min read

அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில் ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் திரைப்படமான ‘ரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

சென்னையில் வாடகை கார் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் வாழ்வில் நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம், அவன் வாழ்க்கையையே மாற்றுவது தான் இப்படத்தின் ஒன்லைன். காதல் கதையுடன், பழிவாங்கும் பின்னணியில் இப்படத்தை இயக்கியுள்ளார் சிவனேசன்.

இப்படத்தில் புதுமுகங்களான ஷான், ஷெர்லி பபித்ரா நடித்துள்ளனர். பவன் ஜினோ தாமஸ், ஆர்யன், பிரதோஷ், விக்ரம் ஆனந்த் ஆகியோர் வில்லன் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர்களான சரவணன், முனிஷ்காந்த், ராமசந்திரன், மணிகண்டன், அஜித் கோஷி, காயத்ரி ரெமா, கிச்சா ரவி, காலா பீம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம், சென்னை, கேரளா, பொள்ளாச்சி ஆகிய ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு விபீன் இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடல் பாடியுள்ளார்.

ரிவெஞ்ச் திரில்லராக உருவாகியுள்ள ‘ரேஜ்’
“என்னை கைது செய்ய உத்தரவா?” - இயக்குநர் லிங்குசாமி விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in