க்ரைம் டிராமா கதையில் ‘சிறை’ அக்‌ஷய் குமார்

க்ரைம் டிராமா கதையில் ‘சிறை’ அக்‌ஷய் குமார்
Updated on
1 min read

‘சிறை’ படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் எல்கே அக்‌ஷய் குமார், அடுத்து ‘ராவடி’ என்ற படத்​தில் நடித்​துள்​ளார். இதில் இன்​னொரு கதா​நாயக​னாக மலை​யாள நடிகரும் இயக்​குநரு​மான பசில் ஜோசப், நடித்​திருக்​கிறார். இப்​படம் டிச.24-ல் வெளி​யாகிறது. இதை அடுத்து அக் ஷய் குமார் நடிக்​கும் இன்​னும் பெயர் வைக்​கப்​ப​டாத படத்​தின் பூஜை சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இந்​தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்​பில் எஸ்​.எஸ்​.லலித் குமார் தயாரிக்​கிறார். எல்​.கே.​விஷ்ணு குமார் இணை தயாரிப்​பாள​ராக பணி​யாற்​றுகிறார். ஹெச்​.​வினோத்​திடம் பணி​யாற்​றிய விஷ்ணு அமரன் இப்​படம் மூலம் இயக்​குந​ராக அறி​முக​மாகிறார். இதில் சுராஜ் வெஞ்​சரமூடு, சேத்​தன் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். ஹேஷம் அப்​துல் வஹாப் இசை அமைக்​கும் இப்​படத்​துக்​கு சரவணன் ராம​சாமி ஒளிப்​ப​திவு செய்​கிறார்.

“வெவ்​வேறு களங்​களை​யும், மாறு​பட்ட கதா​பாத்​திரங்​களை​யும் மைய​மாகக் கொண்டு உரு​வாகும் க்ரைம் டிராமா படமான இது, பார்​வை​யாளர்​களுக்கு புதிய அனுபவத்தை வழங்​கும்” என்​கிறது படக்​குழு.

க்ரைம் டிராமா கதையில் ‘சிறை’ அக்‌ஷய் குமார்
பிரபல மலையாள நடிகை சாவித்திரி ஸ்ரீதரன் காலமானார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in