ரஜினி - கமல் இணையும் பட ப்ரோமோ நாளை வெளியீடு: தியேட்டர்களிலும் வெளியிட பிரம்மாண்ட ஏற்பாடு

ரஜினி - கமல் இணையும் பட ப்ரோமோ நாளை வெளியீடு: தியேட்டர்களிலும் வெளியிட பிரம்மாண்ட ஏற்பாடு
Updated on
1 min read

ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் ப்ரோமோ நாளை வெளியாகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.

தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் அறிமுக ப்ரோமோ வீடியோ நாளை மதியம் வெளியாகவுள்ளது. 3 நிமிடங்கள் அடங்கிய வீடியோவாக இதனை உருவாக்கியுள்ளார் நெல்சன்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். நெல்சனின் முந்தைய படங்கள் போலவே, இப்படத்தின் ப்ரோமோ வீடியோவையும் காமெடி கலந்த ஆக்‌ஷனாக உருவாக்கியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை மதியம் 12:07 வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரோமோ வீடியோ, தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி, சில மணித்துளிகளில் விற்று தீர்ந்தது. தமிழகம் மட்டுமன்றி, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, மும்பை மற்றும் அந்தமான் உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சிபி சக்கரவர்த்தி படத்தினை முடித்துவிட்டுதான் ரஜினிகாந்த் தொடங்கவுள்ளார். ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் பணிகளுக்கு முன்பு, ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை முடித்து வெளியிடவுள்ளார்கள். அதனைத் தொடர்ந்தே முழுமையாக ரஜினி - கமல் இணையும் படத்தின் பணிகளை நெல்சன் மேற்கொள்ளவுள்ளார்.

ரஜினி - கமல் இணையும் பட ப்ரோமோ நாளை வெளியீடு: தியேட்டர்களிலும் வெளியிட பிரம்மாண்ட ஏற்பாடு
T20 WC 2026: சூப்பர் 8 குரூப் 1-ல் தோல்வியடையாத அணிகள்: இந்தியாவுக்கு சவாலா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in