

‘போர்த்தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா மீண்டும் அசோக் செல்வனுக்காக எழுதிய கதையை இயக்கியிருக்கிறார் ஆர்.கார்த்திகேயன். படத்துக்கு ‘அன்பில் அவன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
அசோக் செல்வன் மணி ரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது அடுத்த படம் பற்றி கணத்த அமைதி நிலவிய நேரத்தில், இந்தப் படத்தின் அட்டகாசமான ‘டீசர்’ வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் இரண்டு ஸ்பெஷல், ஒன்று, அசோக் செல்வனுக்கு ஜோடி ப்ரீத்தி முகுந்தன். ‘பிளாஸ்ட்’ படத்தின் மூலம் குடும்பமாக ‘ஸ்டண்ட்’ செய்து மிரட்டியிருந்தாரே, அவரேதான்! இரண்டாவது, அசோக் செல்வனுக்கு ஹிட்டாக அமைந்த ‘ஓ மை கடவுளே’ படத்தைத் தயாரித்த ஹேப்பி ஹை பிக்சர்ஸ் தான் இந்தப் படத்தையும் தயாரித் திருக்கிறது!