

‘பிக்பாஸ் சீசன் 7’ மூலம் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. இவர் ‘வாழ்’, ‘டாடா’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தனது காதலி பூஜாவை கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனது மனைவி, மகனைப் பிரிந்துவிட்டதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “நான் தவறான நபரைத் திருமணம் செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன். திருமணமானதில் இருந்து மோசமான மனிதனாக மாறிக்கொண்டிருந்தேன்.
ஒவ்வொரு நாளும் நான் ஒருவருடைய வாழ்க்கையை அழித்துக்கொண்டிருக்கிறேன் என்ற உணர்வு இருந்தது. இன்னொருவருடன் இணைந்து எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை.
இப்போது என் திருமண வாழ்க்கையில் இருந்து விலகிச் செல்ல முடிவு செய்திருக்கிறேன். இந்த உறவில் என்னால் மூச்சுக்கூட விட முடியவில்லை. குழந்தை, அதன் அம்மாவுடன் இருப்பதே நல்லது என்று நினைத்தேன். நான் எப்போதும் அனாதையாக வாழவேண்டும் என்கிற எனது சாபத்தை ஏற்றுக்கொண்டுவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.