31 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பிரபு - சுகன்யா

31 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பிரபு - சுகன்யா
Updated on
1 min read

‘செந்​தமிழ்ப் பாட்​டு’, ‘சின்ன மாப்​ளே’, ‘மிஸ்​டர் மெட்​ராஸ்’ ஆகிய படங்​களில் பிரபு, சுகன்யா ஜோடி​யாக நடித்​திருந்​தனர். இந்​தப்படங்​களுக்​குப் பிறகு இரு​வரும் மீண்​டும் இணைந்துள்​ளப் படம், ‘மேரி கோல்​டு’.

இதில் இவர்​கள் 31 ஆண்​டு​களுக்​குப் பிறகு மீண்​டும்சேர்ந்து நடிக்​கின்​றனர். மேலும் ரக் ஷன், நம்​ரி​தா, சிங்​கம்​புலி, வடிவுக்​கரசி, இமான் அண்​ணாச்​சி, விவேக் பிரசன்னா உள்பட பலர் நடிக்​கின்​றனர்.

மல்​லி​கார்​ஜுன் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​துக்​குச் சித்து குமார் இசையமைக்​கிறார். டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறு​வனம் மூலம் ஆர்​.ர​வீந்​திரன் தயாரிக்​கிறார்.

சுதர்​சன் இணை தயாரிப்பு செய்​யும் இப்​படத்​தைப் பிரியன் ராஜேந்​திரன் இயக்​கு​கிறார். இப்​படத்​தின் தொடக்க விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

“திருநெல்​வேலி மற்​றும் தூத்​துக்​குடி நகரங்​களைச் சேர்ந்த கதை மாந்​தர்​களுக்கு இடையே நடை​பெறும் சுவாரஸ்​ய​மான போட்​டியை​யும் அலா​தி​யான வாழ்​வியலை​யும் மைய​மாகக் கொண்டு உணர்​வுப்​பூர்​வ​மான குடும்​பக் கதை​யாக இப்​படம் உரு​வாகிறது” என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

31 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பிரபு - சுகன்யா
யுவன் சங்கர் ராஜா இசையில் ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ டீசர் வெளியீடு!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in