

பாடகர் கிருஷ்ணராஜ் | கோப்புப் படம்
சென்னை: பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் (75) உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் இன்று காலமானார். இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகரான இவர், தமிழில் 300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
தமிழ் திரைப்படத் துறையில் தனித்துவமான குரல் வளத்தால் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் பாடகர் கிருஷ்ணராஜ். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா..’, ‘காத்து அடிக்குது..’, ‘சிரிச்சுட்டு போனாலும்..’ உள்ளிட்ட ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
இருப்பினும் ‘பொற்காலம்’ படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடல் இவருக்கு புகழ்சேர்த்த பாடல்களில் ஒன்று. இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகரான இவர், தமிழில் 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.
2000-களுக்குப் பின் பருத்திவீரனில், ’அய்யயோ’ கழுகு திரைப்படத்தில், ’ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்’ ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார். இறுதியாக, ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நாலு நிமிஷம் பாடலைப் பாடியிருந்தார்.
பாடகர் கிருஷ்ணராஜின் உடல், சென்னை வளசரவாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
தேவாவின் இசையில் எண்ணற்ற ஹிட் பாடல்களைக் கொடுத்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த கிருஷ்ணராஜ், தேவா மறைந்த சில நாட்களிலேயே விடைபெற்றிருப்பது சோகமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.