

உங்கள் படம் வரும் தேதியே பொங்கல் தொடங்கும் என்று விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பியிருக்கிறார் ரவி மோகன்.
‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கையில் ஏற்பட்ட பிரச்சினையால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்க்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ரவி மோகன் தனது எக்ஸ் தளத்தில், “மனம் நொறுங்கிவிட்டது விஜய் அண்ணா.. ஒரு தம்பியாக, உங்களுக்குப் பக்கபலமாக நிற்கும் கோடிக்கணக்கான தம்பிகளில் நானும் ஒருவன்.
உங்கள் படங்களுக்கு ஒரு தேதி தேவையில்லை. நீங்கள் தான் தொடக்கம். அந்தத் தேதி எப்போது வந்தாலும், பொங்கல் அப்போதுதான் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார் ரவி மோகன். நாளை (ஜனவரி 9) ‘ஜனநாயகன்’ படத்தின் தணிக்கை பிரச்சினைக்கான தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்தே படத்தின் வெளியீடு எப்போது என்பது தெரியவரும்.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன்’. விஜய், பாபி தியோல், கவுதம் மேனன், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.