சாதி சான்றிதழ் தொடர்பாக பார்த்திபன் தொடர்ந்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க 4 வாரங்கள் கூடுதல் அவகாசம்

சாதி சான்றிதழ் தொடர்பாக பார்த்திபன் தொடர்ந்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க 4 வாரங்கள் கூடுதல் அவகாசம்
Updated on
1 min read

சாதி, மதமற்​றவர் என சான்​றிதழ் பெற விரும்​புவோருக்கு உடனடி​யாக சான்று வழங்​கும் வகை​யில் சட்​டம் இயற்​றக்​கோரி, நடிகர் பார்த்​திபன் தொடர்ந்த வழக்​கில் தமிழக அரசு பதிலளிக்க மேலும் 4 வாரங்​கள் கூடு​தல் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்டுள்​ளது.

இதுதொடர்​பாக ஆர்​.​பார்த்​திபன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “சா​தி, மதமற்​றவர் என சான்​றிதழ் கோரும் விண்​ணப்​பங்​களை உடனடி​யாக பரிசீலிக்​கும் வகை​யில் வரு​வாய்த்​துறை அதி​காரி​களுக்கு உரிய அறி​வுறுத்​தல்​களை வழங்கி அரசாணை பிறப்​பிக்க தமிழக அரசுக்கு கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டிருந்​தது.

ஆனால், அரசின் சட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கும் விவ​காரத்​தில் ஆளுநருக்​கும், அப்​போதைய அரசுக்​கும் இடையே சுமூக​மான உறவு இல்​லாத​தால், அந்த உத்​தரவு கிடப்​பில் போடப்​பட்​டது; தற்​போது அது​போன்ற சூழல் இல்லை என்​ப​தால், சாதி, மதமற்​றவர் என சான்​றிதழ் கோருபவர்​களுக்கு நிவாரணம் அளிக்​கும் வகை​யில் இதுதொடர்​பாக பிரத்​யேக​மாக சட்​டம் இயற்ற தமிழக அரசுக்கு உத்​தர​விட வேண்​டும்” என கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது சாதி, மதமற்​றவர் என சான்​றிதழ் பெற விரும்​புவோர் நீதி​மன்​றத்​தையே நாட வேண்​டி​யிருப்​ப​தால், இந்த வழக்​கில் தன்​னை​யும் ஒரு வாதி​யாக சேர்க்க வேண்​டும் எனக்​கோரி அருண்​கு​மார் என்​பவர் தரப்​பிலும் இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​யப்பட்​டது.

அதையேற்க மறுத்த நீதிப​தி​கள், ஏற்​கெனவே இந்த வழக்​கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. எனவே இடை​யீட்டு மனு எது​வும் தேவை​யில்லை எனக்​கூறி பார்த்​திபன் தொடர்ந்​துள்ள வழக்​கில் தமிழக அரசு தரப்​பில் பதிலளிக்க மேலும் 4 வாரங்​கள் கூடு​தல் அவகாசம் வழங்​கி வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​துள்​ளனர்​.

சாதி சான்றிதழ் தொடர்பாக பார்த்திபன் தொடர்ந்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க 4 வாரங்கள் கூடுதல் அவகாசம்
பிரபல மலையாள நடிகை சாவித்திரி ஸ்ரீதரன் காலமானார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in