மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!
Updated on
1 min read

இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இன்றும் ரசிகர்களால் ஒரு கமர்ஷியல் கிளாசிக் படமாக 'படையப்பா' கொண்டாடப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு 'படையப்பா' திரைப்படத்தின் டிஜிட்டல் முறையில் மெருகூட்டப்பட்ட 4K ரீமாஸ்டர்ட் பதிப்பு கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியான இப்படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது.

வெளியான முதல் நாளில், 'படையப்பா' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.4 கோடி வசூலித்தது. பொதுவாக மறுவெளியீடு செய்யப்படும் தென்னிந்திய திரைப்படங்களின் வசூல் முதல் நாளுக்குப் பிறகு கணிசமாகக் குறையும். ஆனால், 'படையப்பா' வார இறுதி நாட்களிலும் நிலையான வேகத்தைத் தக்கவைத்து, வசூலைத் தொடர்ந்து ஈட்டியது.

முதல் வார இறுதியில், 'படையப்பா' திரைப்படம் உலக அளவில் சுமார் 11 கோடி ரூபாய் வரை வசூல் செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

ரீ-ரிலீஸ் வசூல் பட்டியலில், ‘பாகுபலி: தி எபிக்’ (ரூ. 72 கோடி+), 'சனம் தேரி கசம்', 'தும்ப்பாட்' மற்றும் 'கில்லி' ஆகிய படங்களுக்குப் பிறகு, ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!
பிரதீப் ரங்கநாதன் படத்தை உறுதி செய்த அர்ச்சனா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in