

ராப் இசைக் கலைஞர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறன் படைத்த பால் டப்பா எழுதி, பாடி, நடித்துள்ள புதிய இசை ஆல்பம், ‘ஏரோப்பிளேன்’. இதில் பால் டப்பாவுடன் அனன்யா ராம் பிரசாத்தும் நடித்துள்ளார். இந்த ஆல்பதை ராகுல் அசோக் குமார் இயக்கியுள்ளார். அடியேல் மஸார் இசையமைத்துள்ள இந்த ஆல்பத்துக்கு பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
“காதல் வேணாம்னு சொன்னா காதல் பண்ண சொன்னாயே... எனத் தொடங்கும் இது காதல் தோல்வி பாடல். பிரேக்கப்புக்குப் பிறகு விமானத்தில் பயணிகளாகச் சந்திக்கும் காதல் ஜோடியின் நினைவலைகளாக இப்பாடல் உருவாகியுள்ளது. இணையத்தில் இப்பாடல் வரவேற்பைப் பெற்று வருகிறது” என்றார் பால்டப்பா.