

தனுஷ் - மம்முட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓம்: சாப்டர் 1’ படத்தின் சாய் பல்லவி கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
இந்த அறிமுக வீடியோவை ஒண்டர்பார் பிலிம்ஸ் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘கம்பீரம் அவள் அடையாளம். நீதிக்காக நிற்க்கும் சக்தி. நித்யா ரெட்டியாக சாய் பல்லவியை அறிமுகப்படுத்துகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.
இந்த 1.42 நிமிட அறிமுக வீடியோ, உயரதிகாரி ஒருவர் சாய் பல்லவியை பற்றி இப்படி விவரிகிறார். அவள் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அதிகாரி. ஆந்திரப் பிரதேச காவல் துறையில் ஏஎஸ்பியாக பணியாற்றினார். இன்டர்போலுடன் இணைந்து பணியாற்றுவதற்காக, மத்திய புலனாய்வு பிரிவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். இளம் வயதில் நேர்மை, புத்திசாலித்தனம், அனுபவம் கொண்டவர் என்கிறார்.
தொடர்ந்து, நாயுடுபேட்டையைச் சேர்ந்த வீரமரணம் அடைந்த வனத்துறை அதிகாரியின் மகளான அவர் தற்போது செம்மரக் கடத்தல் பற்றி விசாரிக்கும் ஆபரேஷன் ஓம்-ன் விசாரணை அதிகாரி என்று நித்யா ரெட்டி அறிமுகப்படுத்தப்படுகிறார்.
ஒண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் தனுஷின் 55-வது படம் ‘ஓம்: சாப்டர் 1’. இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். எழிலரசு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் தனுஷ், மம்முட்டியுடன் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நவம்பர் 20 அன்று வெளியாக இருக்கிறது.