3 நாளில் ரூ.100 கோடி வசூலை தாண்டியது ‘ஓ.ம்’

3 நாளில் ரூ.100 கோடி வசூலை தாண்டியது ‘ஓ.ம்’
Updated on: 
1 min read

தனுஷ் - மம்மூட்டி கூட்டணியில் வெளியாகி இருக்கும் ‘ஓ.ம்: ஆபரேஷன் மோல்’ படம் மூன்று நாளில் ரூ.100 வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த தகவலை ஒண்டர்பார் நிறுவனம் அதன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ‘ஓம்’ படம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் ரூ.101.7 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புடன் நவம்பர் 20 அன்று வெளியான ‘ஓம்’ படம் அதன் முதல் நாளில் உலக அளவில் ரூ.31.55 கோடி வசூலித்து இருந்தது. இதில், இந்தியாவில் மட்டும் மொத்தம் ரூ.20 கோடி வசூல் செய்திருந்தது.

இது தனுஷின் முந்தைய இரண்டு படங்களின் வசூலை விட அதிகம். இந்த மூன்று நாள் வசூலின் மூலம் படம் அதன் வரவேற்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவனை பிடிக்க நடத்தப்படும் ஆபரேஷனில், ரகசிய உளவாளியாக அந்த கும்பலுக்குள் நுழைந்து செயல்படும் ஒரு காவல் துறை அதிகாரியைப் பற்றி பேசுகிறது இந்தப் படம்.

தனுஷ் - மம்மூட்டி  கூட்டணியில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஓ.ம்: ஆபரேஷன் மோல்’. இந்தப் படத்தில் இவர்களுடன், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ், நஸ்ருதீன் ஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  

3 நாளில் ரூ.100 கோடி வசூலை தாண்டியது ‘ஓ.ம்’
ஓ.ம்: விமர்சனம் - நடிப்பு அரக்கர்களும், ஆன்மா இல்லாத ஸ்பை த்ரில்லரும்!
3 நாளில் ரூ.100 கோடி வசூலை தாண்டியது ‘ஓ.ம்’
‘டெத் ரயில்வே’ சயாம் மரண ரயில் கதையில்லை: இயக்குநர் தரணி ராஜேந்திரன் நேர்காணல்

X