

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களைத் தயாரித்த வி.எஸ். ராஜ்குமாரின் லியோ விஷன் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தில் நித்யா மேனன் கதையின் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை, நித்யா மேனனின் கேயுரி புரொடக் ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
டி கே இயக்கத்தில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்துக்கு ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். டார்க் காமெடியுடன் கூடிய ஃபேன்டஸி ஜானரில் உருவாகும் இந்தப் படத்துக்கு இயக்குநர் விக்ரம் கே. குமார் கிரியேட்டிவ் புரொடி யூசராக பொறுப்பேற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படம் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.