12 ஆண்டுகளாக தமிழில் நடிக்காதது ஏன்? - நஸ்ரியா விளக்கம்

12 ஆண்டுகளாக தமிழில் நடிக்காதது ஏன்? - நஸ்ரியா விளக்கம்
Updated on: 
1 min read

சூர்யா நடித்​துள்ள ‘சீன்’ திரைப்​படம் நேற்று வெளியானது. இதில் நஸ்ரியா, நஸ்​லென் உள்​பட பலர் நடித்​துள்​ளனர். இதன் புரமோஷனில், ‘3 அல்​லது 4-வது முயற்​சிக்​குப் பிறகே நஸ்ரியா என்​னுடன் நடிக்​கச் சம்​மதித்​தார். 12 ஆண்​டுகளாகத் தமி​ழில் எந்​தப் படத்​தையும் ஒப்​புக் கொள்​ளாமல் இருந்த அவர், இறுதி​யில் எங்​கள் படத்​தில் நடிக்​கச் சம்​மதித்​ததற்கு நன்றி” என்று சூர்யா கூறி​யிருந்​தார்.

இதற்​குப் பதிலளித்​துள்ள நஸ்ரியா, “சூர்யா சார் அப்​படிச் சொன்​னது வெறும் நகைச்சுவைக்​காகத்​தான். உண்​மையில் கால்​ஷீட் பிரச்​சினை மற்​றும் சில குழப்​பங்​கள் காரண​மாகவே நடிக்க முடி​யாமல் போனது. சூர்​யாவின் திரைப்​படத்தை நான் எப்​படி வேண்டு​மென்றே நிராகரிக்க முடியும்?

12 ஆண்​டுகளாகத் தமி​ழில் நடிக்​காததற்​குத் தனிப்​பட்ட காரணம் ஏது​மில்லை. சரியான கதை மற்​றும் கதாபாத்​திரம் எனக்கு அமையாததால்​தான் நடிக்​க​வில்லை” என்று தெரி​வித்​துள்​ளார். நஸ்ரியா, தமி​ழில் கடைசி​யாக ‘திரு​மணம் எனும் நிக்​காஹ்’ என்ற படத்​தில் நடித்​திருந்​தார்.

12 ஆண்டுகளாக தமிழில் நடிக்காதது ஏன்? - நஸ்ரியா விளக்கம்
கமல்ஹாசனின் அடுத்த படத் தலைப்பு ‘சண்டியர்’

X