உருவாகிறது ‘நந்தன் 2’

உருவாகிறது ‘நந்தன் 2’
Updated on
1 min read

சசிகு​மார் நடித்த ‘நந்​தன்’ படம் மூலம் ஒடுக்​கப்​பட்ட மக்​களின் அதி​காரப் பகிர்வு மற்​றும் உள்​ளாட்சி அரசி​யல் சார்ந்த யதார்த்த சூழலை பேசிய இரா.சர​வணன், இப்​படம் வெளி​யாகி 2 ஆண்டு ஆனதை அடுத்​து, ‘நந்​தன் 2’ படத்தை இயக்​கு​கிறார்.

இரா என்​டர்​டெ​யின்​மென்ட் நிறு​வனம் தயாரிக்​கும் இப்​படத்தை அவரே எழுதி இயக்​கு​கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்​கும் இப்​படத்​தின் டைட்​டில் லுக் தற்​போது வெளி​யாகி உள்​ளது.

“சமூக அக்​கறை கொண்ட முக்​கிய​மான பிரச்​சினையை மைய​மாக வைத்து இப்​படம் உரு​வாகிறது. ‘நந்​தன்’ முதல் பாகத்தைவிட இன்​னும் அழுத்​த​மான படைப்​பாக இப்​படம் இருக்​கும். இதில் நடிக்​கும் நடிகர், நடிகைகள் மற்​றும் தொழில்​நுட்​பக் குழு​வினர் தொடர்​பான விவரங்​கள், விரை​வில் வெளி​யிடப்​படும்” என்று படக்​குழு​வினர் தெரி​வித்​துள்​ளனர்​.

உருவாகிறது ‘நந்தன் 2’
‘ஹபீபி’ திரைப்படம் செப்டம்பர் 25 ஓடிடியில் ரிலீஸ்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in