‘ஹபீபி’ திரைப்படம் செப்டம்பர் 25 ஓடிடியில் ரிலீஸ்!

‘ஹபீபி’ திரைப்படம் செப்டம்பர் 25 ஓடிடியில் ரிலீஸ்!
Updated on
1 min read

சென்னை: மீரா கதிரவன் இயக்கிய ‘ஹபீபி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25 அன்று ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் கஸ்தூரி ராஜா பிரதான கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் கடந்த  ஜூன் 12 அன்று திரையரங்குகளில் வெளியானது.

மீரா கதிரவன் இயக்கத்தில், வி.எஸ். முகமது அமீன் கதையமைப்பில் உருவான இப்படம், கடையநல்லூர் பகுதியில் உள்ள இஸ்லாமிய சமூகப் பின்னணியை கொண்டிருந்தது. ஒரு கைத்தறி நெசவாளர் குடும்பத்தின் பின்னணியில் நான்கு தசாப்தங்களாக நடக்கும் சம்பவங்களாக இக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

கஸ்தூரி ராஜா 'யூசுப்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடன் மாளவிகா மனோஜ், தனாஸ்ரீ சுதாகரன், அருள்குமார், அனுஸ்ரேயா ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

ரோமியோ பிக்சர்ஸ், நேசம் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜி.கே.எஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன் இணைந்து தயாரித்த இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவையும், மதி வி.எஸ் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டனர்.

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் வரும் செப்டம்பர் 25 முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

‘ஹபீபி’ திரைப்படம் செப்டம்பர் 25 ஓடிடியில் ரிலீஸ்!
Lust Stories 3: மனித உறவுகளின் ஆழம் | ஓடிடி திரை அலசல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in