

ஏ.ஆர்.ரஹ்மான்
எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் தியாகத்தைக் கவுரவிக்கும் வகையில் அட்டாரி எல்லையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இம்தியாஸ் அலி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் ‘மைன் வாபஸ் ஆவுங்கா’. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இது ஜூன் 12ம் தேதி வெளியாகிறது. இப்பட வெளியீட்டை முன்னிட்டு, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் தியாகத்தைக் கவுரவிக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் அட்டாரி எல்லையில் இன்று (ஞாயிறு) மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை இந்த இசைநிகழ்ச்சி நடைபெறுகிறது.
‘ஜெய் ஹோ - ஏ ட்ரிபியூட் டு தி பிரேவ்ஹார்ட்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதில் படையினர் காட்டும் துணிச்சல், தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றுக்கான நன்றியையும் ஆழ்ந்த மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாக அமைகிறது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இம்தியாஸ் அலி மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்கின்றனர்.