வீரமணி எனும் பங்காளி - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 23

வீரமணி எனும் பங்காளி - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 23
Updated on
4 min read

நான் ​திரைப்​படங்​களுக்கு டப்​பிங் பேசிக் கொண்​டிருந்த காலத்​தில் எனக்கு ஏராள​மான நண்​பர்​கள் இருந்​தார்​கள். இப்​போதும் அந்த நட்​பு, அதே அன்​போடு தொடர்​கிறது. என்னை விட வயதில் மூத்​தவர்​கள், இளை​ய​வர்​கள் என பெரும் வட்​டம் அது.

அப்​போது எனக்கு அறி​முக​மானவர்​களில் ஒரு​வர் வீரமணி. அவரை எங்​கு, எப்​போது முதன் முதலில் சந்​தித்​தேன் என்​பது தெரிய​வில்​லை. தென் மாவட்​டத்​துக்​கார​ரான அவர் எம்​.ஆர்​.​ரா​தாப்​பா​வின் நாடகக்​குழு​வில் இருந்​திருக்​கிறார். ராதா​ரவி அண்​ணன் குடும்​பத்​துக்கு மிக வேண்​டிய​வர்.

என் சகோ​தரி ஹேம​மாலினி அவரை ‘வீரமணி​யண்​ணே’ என்று அழைப்​பார். நான் ‘பங்​காளி’ என்று அழைப்​பேன். அப்​பா​வி​யான மனிதர் அவர். விசுக்​கென்று கோபம் வரும். ஆனால், அடுத்த சில நிமிடங்​களில் மறைந்து விடும்! டப்​பிங் ஆர்ட்​டிஸ்​டாக​வும், டப்​பிங் இன்​சார்​ஜாக​வும், சில காலம் டப்​பிங் யூனியன் தலை​வ​ராக​வும் இருந்​தார்.

அவரை எப்​போதும் கிண்​டல் செய்து கொண்டே இருப்​பேன். அவரும் என்னை ‘டேய் சொட்​ட​யா’ என்று கேலி செய்து கொண்டே இருப்​பார். ஒரு முறை ஐயப்​பன் கோயிலுக்கு செல்ல மாலை போட்​டிருந்​தோம். மாலை போட்​டால் ‘சாமி’ என்று அழைப்​பது வழக்​கம். அவரை நான் வழக்​கம் போல கிண்​டல் செய்​தேன். அவருக்கு கோபம் வந்​து​விட்​டது.

“சும்​மாரு​டா...” என்று கோப​மாகச் சொல்லி விட்டு பிறகு உடனே “சாமி” என்​றார். எல்​லோரும் சிரித்​து​விட்​டோம். இது போன்ற கேரக்​டர் அவர். அவருடன் இருந்​தால் ஜாலி​யாக இருக்​கும். டப்​பிங்​கில் எங்​களில் சிலருக்கு வேலை இல்​லாத நேரத்​தில் பொழுது​போக்​காக ரம்மி விளை​யாடு​வோம்.

திடீரென்​று, “போன ஆட்​டத்​துக்கு முதல் ஆட்​டத்​துல அந்த கார்டை நீ போட்​டுருக்​கக் கூடாது” என்​பார். நான் அவரைப் பார்த்து “அது முடிஞ்சு போச்சு பங்​காளி! இப்ப புது ஆட்​டத்தை ஆடறோம். இதை பத்தி பேசுவோம்” என்று சொல்​வேன். “இல்ல நீ, அந்த கார்டை போட்​ட​தால​தான் அவன் அடிச்​சான்” என்​பார்.

பிறகு, “நீ என்ன கார்டு போட்​டே?” என்று ஒவ்​வொரு​வரிட​மாகக் கேட்​டுக் கொண்​டிருப்​பார். “யோவ். நாங்க போட்​டதை போட்​டாச்​சு. அடுத்​தால நீதான் போட​ணும்” என்​போம். “அப்​படி​யா?” என்​பார், அப்​பா​வி​யாக. பிறகு அவர் கையில் அதி​க​மான கார்டு இருப்​பது போல தெரி​யும். என்ன இவ்​வளவு கார்டு வச்​சிருக்​காரு என்று அவரைச் எண்​ணச் சொல்​வோம்.

“கரெக்டா 14 கார்டு இருக்​கு, அதுக்​கென்​ன?” என்​பார். “ரம்​மிக்கு 13 கார்​டு​தான் இருக்​கணும்” என்று சொன்​னால், “சரி இந்தா ஒரு கார்டை போட்​டுடுறேன்” என்​பார். இப்​படி​யான ஆள் அவர். ஒரு நாள், செல​வுக்​குப் பணமில்லை என்ற கவலை​யில் சோக​மாக அமர்ந்​திருந்​தேன். பக்​கத்​தில் நாடக நடிகர் திருப்​பூர் கிருஷ்ணன் என்​பவர் புகை பிடித்​துக் கொண்​டிருந்​தார். அப்​போது எனக்கு திரு​மண​மாக​வில்​லை.

“சொட்​டையனுக்கு யாரும் பொண்ணு கொடுக்​கலைன்னு ரொம்ப சோகமா இருக்​காம் பாரு” என்று வீரமணி என்னை கிண்​டல் செய்​தார். நான் அமை​தி​யாக இருந்​தேன். பிறகு, “நான் ஒண்ணு சொல்​றேன், கேட்​கிறி​யா?” என்​றார், வீரமணி. “என்​ன?” என்​பது போல தலை​யாட்​டினேன். “என் மச்​சினியை கல்​யாணம் பண்​ணிக்​கிறி​யா?” என்று கேட்​டார்.

“ஒரு குடும்​பத்​துக்கு ஒரு கிறுக்​கன்​தான் மாப்​பிள்​ளையா இருக்​கணும்” என்​றேன். திருப்​பூர் கிருஷ்ணன் அண்​ணன் புகையை இழுத்​துக் கொண்​டிருந்​தவர், அப்​படியே குபுக்​கென சிரித்து இருமி விட்​டார்! அவருக்கு சிரித்து சிரித்து இரு​மல் நிற்​க​வில்​லை. சிகரெட் புகை மூக்​குக்​குள் போய் சிக்​கலை ஏற்​படுத்தி விட்​டது! வீரமணி​யும் விழுந்து விழுந்து சிரித்​தார். இப்​படி​யெல்​லாம் ஜாலி​யாக ஒரு குடும்​பம் போல பழகி, பேசிக் கொண்​டிருப்​போம்.

நான் டப்​பிங் தியேட்​டர் ஒன்​றில் பேசிக்​கொண்​டிருந்த போது இயக்​குநர் ஒரு​வர் வந்​தார். அவர் பெயர் வேண்​டாம். நல்ல மது போதை​யில் இருந்​தார். நேராக வந்​தவர் என்னை பார்த்​ததும் அழு​தார். நான் பதறி, “ஏன் அழறீங்​க?” என்று கேட்​டேன். “நான் ஊரோடு போகப் போகிறேன். என்​னால முடியலை. எனக்கு கொஞ்​சம் பணம் வேணும். கொடு” என்று கேட்​டார்.

“அந்​தளவுக்கு என்​னாச்​சு?” என்று கேட்​டேன்! “என் மனைவி இறந்​துட்​டாங்க. அவங்​களுக்கு ப்ளட் கேன்​சர். இனிமே இங்க இருந்து என்​னால வேலை பார்க்க முடி​யாது. ஊருக்கே போறேன்” என்று மீண்​டும் அழுது​கொண்டே சொன்​னார். எனக்கு அவர் மேல் பரி​தாபம் வந்​தது. அப்​போது டப்​பிங்​கில் எனக்கு ‘கன்​வேயன்​ஸ்’ 50 ரூபாய் தரு​வார்​கள். அதை போய் வாங்கி வந்து அவரிடம் கொடுத்​தேன்.

<div class="paragraphs"><p>ராதாரவி, வீரமணி</p></div>

ராதாரவி, வீரமணி

மறு​நாள் டப்​பிங் முடிந்து இரவில், கோடம்​பாக்​கம் ஹாலிவுட் ஓட்​டலில் சாப்​பிட்​டுக் கொண்​டிருந்​தேன். அப்​போது வீரமணி​யும் அதே டைரக்​டரும் அங்கு வந்​தார்​கள்! முந்​தைய நாள் என்னை சந்​தித்​ததோ, என்​னிடம் பணம் வாங்​கியதோ அவருக்கு ஞாபகத்​தில் இல்​லை. வீரமணி என்னை பார்த்​ததும் நேராக வந்து பேசிக் கொண்​டிருந்​தார். “உட்​காரு பங்​காளி, சாப்​பிடு!” என்​றேன்.

வீரமணி, “இல்ல, அவரு மனைவி கர்ப்​பமா இருக்​காங்க. அவங்​களுக்கு டிபன் வாங்​கணும்னு சொன்​னார். அதனால நானும் அவர் கூட வந்​தேன் என்று சொன்​னதும் எனக்கு ஜிவ்​வென்று கோபம் ஏறியது. அப்​போது நான் கொஞ்​சம் முரட்​டுத்​தன​மாக அலைந்து கொண்​டிருந்த நேரம்! “ஓரே ஒரு நிமிஷம் பொறு. அந்த ஆளை தூக்​கிப்​போட்டு மிதிச்​சுட்டு வர்​றேன்” என்று எழுந்​தேன்.

“ஏன், எதுக்​குப்​பா... பொறு” என்று என்னை அடக்​கி​னார். முந்​தைய நாள் நடந்​ததை சொன்​னேன். கர்ப்​பிணி மனை​வியை இறந்​து​விட்​ட​தாகச் சொன்​னதை என்​னால் ஏற்​றுக்​கொள்ள முடிய​வில்​லை. இரண்டு அடி​யா​வது அந்த ஆளை அடிக்க வேண்​டும் என்று முண்​டிக் கொண்டு நின்​றேன்.

“சரி சரி விடு. தண்ணி போடறதுக்கு பொய் சொல்லி காசு வாங்​கி​யிருப்​பாரு.. விடு” என்​றார்.

மிக​வும் வேதனைப்​பட்​டேன். மது, ஒரு​வனை எந்​தளவுக்கு அடிமை​யாக்கி விடு​கிறது என்​பதை அப்​போது​தான் புரிந்து கொண்​டேன்​!அதுக்​குப் பிறகு அந்த இயக்கு நரை சந்​திக்​கவே இல்​லை. வீரமணி​தான் அவருக்கு உதவி​கள் செய்​தார். பணம் இருக்கு என்​றால் இருக்கு என்​பார். இல்லை என்​றால் இல்லை என்று வெளிப்​படை​யாகச் சொல்​லி​விடு​வது வீரமணி​யின் கேரக்​டர்.

அவர் புகை பிடிப்​பவர்

ஒரு​முறை வெளி​நாட்டு சிகரெட் பாக்​கெட் ஒன்றை வாங்கி அதை குடித்​திருக்​கிறார். அதிலிருந்து அந்த சிகரெட் மீது அவருக்கு பிரி​யம் வந்​து​விட்​டது. “நீ குடிக்​கும் சிகரெட் பெயரை சரி​யாக சொல்​லி​விட்​டால், ஒரு வருடம் முழு​வதும் நீ எந்த படத்​துக்கு இன்​சார் ஜாக இருக்​கிறாயோ, அதற்கு சம்​பளம் வாங்​காமல் டப்​பிங் பேசுகிறேன்” என்று சொன்​னேன்.

அவருக்கு பேசும்​போது கொஞ்​சம் திக்​கும். அவர், “போ​டா” என்​பார். அந்த சிகரெட், பென்​சன் அண்ட் ஹெட்​ஜஸ். அதை பங்​காளி ‘பென்​சன் எக்​ஸஸ்’ என்றே சொல்​வார்​.அரு​கில் இருந்த ராதா​ரவி அண்​ணன் “அவனுக்​குத்​தான் வரலை​யே, பேசாம விடேன். எதுக்​குடா அவன் உயிரை எடுக்​கிறே” என்​றார்.

உடனே நான், “இதை எப்​படி போய் கடை​யில கேட்​பே?” என்று வீரமணி​யிடம் கேட்​டேன். “அதுக்​குத்​தான்டா ஒரு ஐடியா வச்​சிருக்​கிறேன். இந்த சிகரெட் முடிஞ்​சதும் பாக்​கெட்டை பத்​திரமா வச்​சிருந்​து, அதைக் காண்​பிச்சு வாங்​கிட்டு வரு​வேன்” என்​றார். “இப்​படி பெயர் சொல்ல வராத சிகரெட்டை குடிக்​கணு​மா?” என்று நாங்​கள் விளை​யாடு​வோம்.

ஒரு முறை, ராதா​ரவி அண்​ணன், வீரமணி எல்​லோரும் சபரிமலைக்கு செல்​லும்​போது பெரிய பாதை​யில் ஒரு மரத்​தடி​யில் அமர்ந்து இளைப்​பாறி இருக்​கிறார்​கள்! அப்​போது, “வீரமணி, நீதான் கவிதை பாட்​டெல்​லாம் எழுது​வேன்னு சொன்​னியே, இப்ப ஒரு பாட்டு எழுதேன்” என்று ரவி அண்​ணன் கேட்​டதும், “சுச்​சுவேஷன் சொல்​லாம எப்​படி எழுத?” என்​றிருக்​கிறார் வீரமணி.

“ஒரு ஊரில் ஒரு நல்​ல​வன், அவன் கெட்​ட​வ​னாகிட்​டான். அதை வச்சு எழுது” என்று சொல்ல ஒரு நிமிஷம் கூட ஆகவில்​லை. “கேட்​கிறீங்​களா என்​றிருக்​கிறார் வீரமணி. “அதுக்​குள்ள எழு​திட்​டி​யா? என்​னய்யா அதிசயமா இருக்​கு?” என்று ராதா​ரவி அண்​ணன் ஆச்​சர்​யப்​பட, “வார்த்தை வந்தா எழு​திட வேண்​டியது​தானே! கேளுங்க” என்ற வீரமணி, ராதா​ரவி அண்​ணன் சொன்ன வார்த்​தைகளையே பாடி காண்​பிக்க, “இது பாடலா? பாட்​டெழுத சொன்​னா, நான் சொன்​னதை வச்சே பாடி காண்​பிக்​கிறி​யா?” என்று அவரை பொய்​யாக அடிக்​கப் போக, அனை​வரும் சிரித்​தார்​கள்.

இப்​படி ஜாலி​யான கலகலப்​பான மனிதர், பங்​காளி வீரமணி. கரோ​னா காலத்​தில்​ ஒரு​நாள்​ திடீரென கால​மாகி விட்​டார்​. போய்​ பார்க்​க முடிய​வில்​லை என்​றாலும்​ எப்​போதும்​ என்​ மனதில்​ இருக்​கிறார்​ என்​ “பங்​காளி வீரமணி".

(திங்​கள்​தோறும்​ பேசுவோம்​)

வீரமணி எனும் பங்காளி - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 23
வீடு மனைவி மக்கள் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 22

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in