

நடிகை சமந்தா
நடிகை சமந்தா நடித்த ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கில் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்நிலையில் இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்ட அவர், தான் தாய்மை அடைந்திருப்பதை அண்மையில் அறிவித்திருந்தார்.
இதற்கிடையே அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்திருந்த அவர், வெள்ளிக் கிழமை ரசிகர்களின் கேள்விகளுக்குத் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிலளித்தார். பல ரசிகர்கள் அவர் தாய்மை அடைந்திருப்பது பற்றியே கேட்டனர்.
அப்போது அவர் கூறும்போது, “தற்போது தாய்மை அடைந்திருக்கும் காலத்தை முழுமையாக அனுபவித்து வருகிறேன். இதுவரை 11 கிலோ எடை அதிகரித்துள்ளேன். இந்த அனுபவம் தனக்கு எதிர்பாராத விதமாக, வலிமையையும் அதிகார உணர்வையும் தருகிறது. நான் இவ்வளவு வலிமை பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. பெரும்பாலும் திக்குமுக்காடிப் போவேன் என்று தான் நினைத்தேன்” என்று கூறியுள்ளார்.