‘மூக்குத்தி அம்மன் 2 - மஹாசக்தி’யில் புதிய அம்மன்!

‘மூக்குத்தி அம்மன் 2 - மஹாசக்தி’யில் புதிய அம்மன்!
Updated on: 
1 min read

புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவுக்குப் பிறகு அம்மன் வேடத்தில் வசீகரித்த அடுத்த தலைமுறை கதாநாயகி ரம்யா கிருஷ்ணன்.

அவருக்குப் பின் மீனா, மீனாவுக்குப் பிறகு அனுஷ்கா. இப்போது அந்த இடத்தை ‘மூக்குத்தி அம்மன்’ மூலம் நிரப்பியிருப்பவர் நயன்தாரா.

2020 தீபாவளிக்கு வெளியாகி ஹிட் அடித்த ‘மூக்குத்தி அம்மன்’ முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி - என்.ஜே. சரவணன் இணைந்து இயக்கியிருந்தனர்.

அதில், போலிச் சாமியாரை விரட்டியடிக்கும் குலதெய்வமாக நடித்திருந்தார் நயன்தாரா. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறையும் தீபாவளிக்குக் களம் காணவிருக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2 - மஹாசக்தி’ படத்தை சுந்தர்.சி இயக்கியிருக்கிறார்.

சுந்தர்.சி - ஐசரி கணேஷ் தயாரிப்பு என்பதால் ஆஸ்தானக் கலைஞர் போல் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார்.

படத்தில் அம்மனாக மட்டுமன்றி, பெண் காவலராகவும் நயன்தாரா வருகிறார். பூர்வஜென்மத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் கதைக் களம்.

கிராஃபிக்ஸ், விஷுவல் எஃபெக்ட்களுக்காக மட்டும் படத்தை முடித்து ஓராண்டு அவகாசம் எடுத்திருக்கிறார்கள்.

தற்போது ‘த வேல்ட் ஆஃப் மஹாசக்தி’ என்கிற தலைப்பில் முன்னோட்டக் காட்சிகளை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

அதில் கான்ஸ்டபிள் நயன்தாராவுக்கு, ஊர்வசி தன் வீட்டில் தஞ்சம் கொடுக்கும் காட்சிகளும் ரெஜினா கசாண்ட்ரா வில்லியாக நடித்திருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

‘மூக்குத்தி அம்மன் 2 - மஹாசக்தி’யில் புதிய அம்மன்!
தேவா: வைராக்கியத்தின் வெற்றி | அஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in