

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.வெங்கடேஷ், பகவதி பெருமாள், ஷெல்லி கிஷோர் என பலர் நடித்துள்ள படம் ‘மொத ராத்திரி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் சங்கர் இசை அமைத்திருக்கிறார். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில், ராஜா கருப்பசாமி பேசும்போது, “என் கதையின் ஆன்மாவைப் புரிந்து கொண்டு வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு நன்றி. என்னுடைய அனுபவத்திலிருந்து உருவான கதை தான் இந்த படம். என் வாழ்க்கையின் அனைத்து பெண்களுக்கும் இந்தப் படத்தை சமர்ப்பிக்கிறேன்” என்றார்.
படத்தின் ஹீரோ ரிஷிகாந்த் பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை ஒரு குறும்படமாக இயக்குநர் கொண்டு வந்தார். அதன் பிறகு 6 வருடம் பயணம் செய்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். என்னை விட்டுக் கொடுக்காத இயக்குநருக்கும், கதை மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. ஒரு நல்ல படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. குடும்பமாக இந்தப் படத்தை ரசிப்பீர்கள். அனைவருக்கும் கண்டிப்பாக இப்படம் பிடிக்கும்” என்றார்.