

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படம், டிச.19-ம் தேதி வெளியானது. சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார்.
இதையடுத்து சண்முகபாண்டியன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்குகிறார். இவர் ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தம புத்திரன்’, ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற படங்களை இயக்கியவர். தற்போது மாதவன் நடிக்கும் ‘அதிர்ஷ்டசாலி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
மித்ரன் ஆர். ஜவஹர், சண்முக பாண்டியன் இணையும் படத்தை, ‘கொம்புசீவி’ படத்தைத் தயாரித்த ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வும் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.