

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குநராக அறிமுகமான படம், ‘மின்னலே’. மாதவன், ரீமா, அப்பாஸ், விவேக் நடித்த இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்ற ‘வசீகரா’, ‘வெண்மதி வெண்மதியே’, ‘ஒரே ஞாபகம்’உள்பட அனைத்துப் பாடல்களும் வரவேற்பை பெற்றன. 2001-ம் ஆண்டு வெளியான இப்படம் 25 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது நவீன தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு பிப்.13-ல் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை வெளியிடுகிறார்.