சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் கதையில் ‘எம்ஜி 24’

சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் கதையில் ‘எம்ஜி 24’
Updated on
1 min read

‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் பிரபல​மான பிரணவ் மோக​னன், ‘ஸ்ட்​ரைக்​கர்’ படத்​தில் நடித்த ஜஸ்​டின் விஜய்​.ஆர் ஆகியோர் கதை​யின் நாயகர்​களாக நடித்​துள்ள படம், ‘எம்ஜி 24’.

சுவேதா நட்​ராஜ், தனலட்​சுமி, ஆட்டோ சந்​திரன், மலை​யாள நடிகர் அப்​துல் பஷில், பிம்​மிசி​வா, அர்​ஜுன் கார்த்​திக் உள்பட பலர் நடித்துள்​ளனர். பி.​பாலாஜி, நவீன்​கு​மார் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்​கு சதாசிவ ஜெய​ராமன் இசையமைத்​துள்​ளார். ஜேஆர் சினி வேர்ஸ் சார்​பில் டாக்​டர் ராஜேந்​திரன் வழங்க, ஜெய​பால் சுவாமி​நாதன் தயாரித்​துள்ள இப்​படத்தை பயர் கார்த்​திக் இயக்கியுள்​ளார்.

படம் பற்றி பயர் கார்த்​திக் கூறும்​போது, “இது, சஸ்​பென்ஸ் க்ரைம் த்ரில்​லர் படம். உதவி இயக்​குந​ராக இருக்​கும் நாயக​னும்​, அவன் நண்​பர்​களும் பாலக்​காட்​டில் இருக்​கும் ஒரு வீட்டை வாங்​கும் பொருட்டு அதைப் பார்ப்​ப​தற்​காக செல்​கின்​றனர். அங்கே எதிர்பா​ராத பல சம்பவங்​கள் நடக்க, அதிலிருந்து தப்​பித்​தார்​களா, அவர்​களுக்​கும், அந்த வீட்​டில் இருந்​தவர்​களுக்​கும் என்ன நடந்​தது ? என்​பதுதான் திரைக்​கதை.

பாலக்​காட்​டில் உள்ள ஒரு வீடு, மகிழ் கோமான் என்ற பழைய ஜமீனுடையது. அந்த வீட்​டின் நம்​பர் 24. படத்​தின் பெரும்​பாலான காட்​சிகள் இந்த வீட்​டில் நடப்​ப​தால் ஜமீனுடைய பெயரை​யும் வீட்டின் எண்​ணை​யும் இணைத்து ‘எம்ஜி 24’ என்று தலைப்பு வைத்துள்​ளோம்” என்​றார். இப்​படம் பிப்​.20-ம்​ தேதி வெளியாகிறது.

சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் கதையில் ‘எம்ஜி 24’
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்: வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை அடக்கும் காளையர்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in