

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மெண்டல் மனதில்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தத் தகவலை ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘மெண்டல் மனதில்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. மாஸ்டர் செல்வராகவனுடன். இது ஒரு செல்வராகவனின் காதல் கதை எனக் கூறி, இயக்குநருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து வரும் படம், ‘மெண்டல் மனதில்’. இதில் நாயகியாக மாதுரி ஜெயின் நடிக்கிறார். பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கும் இந்தப் படம் குறித்து 2024-ல் அறிவிப்பு வெளியானது.
கடந்த 2025 அக்டோபரில் படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இப்படத்துக்கு அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணியை பாலாஜி மேற்கொள்கிறார்.