உறியடி விஜயகுமாரின் ‘அறிவு’ டிச.11-ல் ரிலீஸ்

உறியடி விஜயகுமாரின் ‘அறிவு’ டிச.11-ல் ரிலீஸ்
Updated on: 
1 min read

உறியடி விஜயகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அறிவு’ படம் டிசம்பர் 11 அன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்தத் தகவலை மூவிட்​ரோன் நிறு​வனம் அதன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘கண்கள் பார்ப்பதைக் கடந்தும் எண்ணங்களின் உலகம் விரிகிறது. ‘அறிவு’ டிசம்பர் 11-ல் திரையரங்குகளில் வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளது.

சத்யா சிவா இயக்கத்​தில், உறியடி விஜய்​கு​மார் நடித்திருக்கும் படம் ‘அறிவு’. மூவிட்​ரோன் நிறு​வனம் சார்பில் சாய்​வினோத் ஜெயக்​கு​மார் தயாரித்து இருக்கும் இந்தப் படத்தில் கயல் ஆனந்தி, ஐ.எம்​.​விஜயன், சிங்​கம்​புலி, தீபா சங்​கர் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி.இ​மான் இசை அமைத்திருக்கும் படத்துக்கு, தில் ராஜு  ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் நிறைவடைந்தது. தற்போது டிசம்பர் 11 அன்று படம் வெளியாக இருக்கிறது. 

உறியடி விஜயகுமாரின் ‘அறிவு’ டிச.11-ல் ரிலீஸ்
சோனியா காந்தியின் சுயசரிதையை திரைப்படமாக்க தெலங்கானா காங். திட்டம்

X