‘அதோ முகம்’ கூட்டணியின் ‘மேரேஜ் ஸ்டோரி’

‘அதோ முகம்’ கூட்டணியின் ‘மேரேஜ் ஸ்டோரி’
Updated on
1 min read

கடந்த 2024-இல் வெளியான ‘அதோ முகம்’ இப்படியும்கூடத் திருப்பங்களை யோசிக்க முடியுமா என த்ரில்லர் ரசிகர்களை நினைக்க வைத்தது. தற்போது அந்தக் கூட்டணி ‘மேரேஜ் ஸ்டோரி’ என்கிற தங்களுடைய அடுத்த படத்தை எடுத்து முடித்து, முதல் தோற்றத்தை வெளியிட்டிருக்கிறது.

தங்களது ரீல் பெட்டி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இம்முறை முழுநீள நகைச்சுவை கலாட்டா வகைக் கதையைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் எஸ்.பி.சித்தார்த், ஷபானா ஷாஜகான் ஆர்யன், தீபிகா வெங்கடாசலம் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், நிழல்கள் ரவி, அருள்தாஸ், புதுவை பூபாலன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“நட்பு, காதல், குடும்பப் பின்னணியில் நடக்கும் இயல்பான நகைச்சுவையும் எதிர்பாராத திருப்பங்களும் இதைக் குடும்பங்களுக்கான படமாக ஆக்கியிருக்கிறது” என்கிறர் இயக்குநர்.

‘அதோ முகம்’ கூட்டணியின் ‘மேரேஜ் ஸ்டோரி’
Natchathiram Nagargiradhu: அடக்குமுறைகளை சுட்டெரிக்கும் சூரியன் ‘ரெனே’ | திரை தேவதைகள் 23

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in