‘ட்யூட்’ படத்திலிருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

‘ட்யூட்’ படத்திலிருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ‘ட்யூட்’ படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘டியூட்’ திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த, 'கருத்த மச்சான்' மற்றும் 'பணக்காரன்' படத்தில் இடம் பெற்றிருந்த '100 வருஷம் இந்த மாப்பிள்ளையும்' ஆகிய பாடல்கள் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நேற்று முன் தினம் இந்த வழக்கில் ஆஜரான இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாடலுக்கான உரிமை இளையராஜாவிடம் உள்ளது. அதனால் படத்திலிருந்து பாடலை நீக்கியும், பாடலுக்கு தடை விதித்தும், உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி் இன்றைக்கு ஒத்திவைத்த நிலையில், இன்று இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், இளையராஜா பாடல்களின் புனிதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் 'கருத்த மச்சான்' பாடலை ’ட்யூட்’ படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பாடலை நீக்க ஏழு நாள் அவகாசம் தேவை என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையே நீதிபதிகள் நிராகரித்தனர். இளையராஜாவின் மனுவுக்கு பதிலளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

‘ட்யூட்’ படத்திலிருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இனி பாஜகவை நம்பி புண்ணியமில்லை... ஆளுக்கொரு முடிவில் அதிமுக முன்னோடிகள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in