இனி பாஜகவை நம்பி புண்ணியமில்லை... ஆளுக்கொரு முடிவில் அதிமுக முன்னோடிகள்!

இனி பாஜகவை நம்பி புண்ணியமில்லை... ஆளுக்கொரு முடிவில் அதிமுக முன்னோடிகள்!
Updated on
1 min read

அதி​முக-​வில் இருந்து நீக்​கப்​பட்ட செங்​கோட்​டையன் டெல்​லிக்​கும் சென்​னைக்​கு​மாய் பறந்து பார்த்​து​விட்டு இனி எது​வும் நடக்​காது என்று தெரிந்து போன​தால் தவெக-​வில் தஞ்​சம் புகுந்​து​விட்​டார். அடுத்​த​தாக ஓபிஎஸ்​ஸும், “டிசம்​பர் 15-ல் திருப்பு முனை முடிவை எடுப்​பேன்” என திகில் கிளப்​பிக் கொண்​டிருக்​கிறார். அடுத்​தவ​ரான தினகரனும் ஜனவரி​யில் கூட்​டணி குறித்து முடிவு என முன்னோட்டம் விட்​டிருக்​கிறார்.

இவர்​கள் மூவருமே இது​வரைக்​கும் காத்​திருந்​தது பாஜக-​வின் பதிலுக்​காகத்​தான். ஆனால், பழனி​சாமி​யின் பிடி​வாதத்தை மீறி பாஜக-​வால் இவர்​களுக்கு எந்​தப் பிடி​மானத்​தை​யும் கொடுக்க முடிய​வில்​லை. அதனால் அவர்​கள் தங்​களுக்​குத் தெரிந்த வழிகளில் பயணப்பட ஆரம்​பித்து விட்​டார்​கள்.

அதி​முக-வை தங்​கள் பிடிக்​குள் வைத்​திருக்க வேண்​டும் என்பதற்காக முதலில் ஓபிஎஸ்ஸை வைத்து தர்​ம​யுத்​தம் நடத்த வைத்​தது பாஜக. அடுத்​த​தாக, அண்​மை​யில் செங்​கோட்​டையனை எதையோ சொல்லி சீவி​விட்டு பழனி​சாமிக்கு எதி​ராக கெடு​வி​திக்க வைத்​தார்​கள். ஆனால், அரசி​யலில் பழம் தின்று கொட்டை போட்ட பழனி​சாமி யிடம் பாஜக-​வின் எந்​தப் பாச்​சா​வும் பலிக்​க​வில்​லை.

அதனால், இனிமேல் பாஜக-வை நம்​பிக் கொண்​டிருப்​ப​தில் புண்ணியமில்லை என்ற முடிவுக்கு வந்த தினகரனும் ஓபிஎஸ்​ஸும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணியை விட்டு வில​கி​னார்​கள். கடைசி​யாக தேவர் ஜெயந்​தி​யின் போது இவர்​களோடு ஒன்​றாக வண்டி ஏறிய செங்​கோட்​டையனை அதையே காரண​மாக வைத்து கட்​சியைவிட்டு தந்​திர​மாக கட்​டம்​கட்​டி​னார் பழனி​சாமி.

அதேசம​யம், தேவரை சாட்​சி​யாக வைத்து ஒன்று சேர்ந்த இந்த மூவரும். ‘நாங்​கள் ஒன்​றிணைந்து விட்​டோம் எங்​களுக்​கான வழியை நீங்​கள் காட்​டா​விட்​டால் நாங்​களாகவே சுய​மாக முடி​வெடுத்து எங்​களுக்​கான வழிகளைத் தேடிக் கொள்​வோம்’ என்று பாஜக-வுக்கு சேதி சொன்​னார்​கள்.

இதனிடையே, இவர்​களை தங்​கள் கூட்​ட​ணிக்​குள் ‘தனி ஏற்பாட்டுடன்’ கொண்டு வரும் திட்​டம் குறித்து ஜி.கே.​வாசனை பழனி​சாமி​யின் வீட்​டுக்கே அனுப்பி பேசச் சொன்​னது பாஜக. அதற்​கும் சேலத்​திலிருந்து சரி​யான சிக்​னல் கிடைக்​காத​தால் மூவரும் அடுத்​தகட்ட நகர்​வு​களில் இறங்​கி​விட்​டார்​கள். அதன் தொடக்​கமே செங்​கோட்​டைன் தவெக-​வில் இணைந்​திருப்​பது.

அடுத்​த​தாக, ‘டிசம்​பர் 15’ என ஓபிஎஸ் விதித்​திருக்​கும் கெடு​வும் பாஜக-வுக்கு வைக்​கப்​பட்ட கெடு​தான். அதற்​குள் எது​வும் நடக்​க​வில்லை என்​றால், அதி​முக தொண்​டர்​கள் மீட்​புக் ‘குழு’வை ‘கழகம்’ ஆக்கி என்​டிஏ-வுக்கு எதி​ராகவே சென்​று​விடு​வோம் என்​பது தான் இதன் மூலம் பாஜக-வுக்கு ஓபிஎஸ் சொல்லி இருக்​கும் சேதி என்​கிறார்​கள்.

அப்​படியொரு முடிவுக்கு வரும் பட்​சத்​தில், தவெக அல்​லது திமுக அணிக்​குச் செல்​ல​வும் ஓபிஎஸ் தயங்க மாட்​டார் என்​கிறார்​கள். அதேசம​யம், ஓபிஎஸ்ஸை முதலில் வழியனுப்பி வைத்​து​விட்டு அதற்கு வரும் ரியாக் ஷன்​களைப் பார்த்​து​விட்டு அதற்​கேற்ப முடிவு​களை எடுக்​க தினகரனும்​ ஏகப்​பட்​ட எதிர்​பார்ப்​பு​களு​டன்​ காத்திருக்​கிறார்​.

இனி பாஜகவை நம்பி புண்ணியமில்லை... ஆளுக்கொரு முடிவில் அதிமுக முன்னோடிகள்!
“செங்கோட்டையன் எந்தக் கட்சியில் சேர்ந்தால் எங்களுக்கு என்ன?” - மதுரையில் பழனிசாமி காட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in