மஞ்சணத்தி: இளையராஜாவே கதாநாயகன்!

மஞ்சணத்தி: இளையராஜாவே கதாநாயகன்!
Updated on
1 min read

பொதுவாக ஒரு படத்தின் பூஜை அல்லது தொடக்க விழாவில் படத்தின் கதாநாயகன் அருகில் நின்று கதாநாயகி ஊடகங்களுக்கு போஸ் கொடுப்பார். ஆனால், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தொடங்கியுள்ள ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பில் அந்தக் கலாச்சாரத்தைக் கதாநாயகிகளே புரட்டிப் போட்டுவிட்டார்கள்.

இந்தப் படத்தில் கதிர் முதன்மை நாயகன். ஆனால், கயாடு லோகர், பிரியங்கா மோகன், பூர்ணிமா ரவி என மூன்று கதாநாயகிகள்.

மாரி செல்வராஜுடன் முதல் முறையாக இணைந்திருக்கும் இளையராஜாவே இப்படத்தின் கதாநாயகன் என்பதை உணர்ந்து, படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட இளையராஜாவின் இடம், வலமாகக் கதாநாயகிகள் கயாடு லோகர், பிரியங்கா மோகன் இருவரும் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளனர். படப்பிடிப்புக்கு முன் படத்தின் திரைக்கதை புத்தகத்தை நடிகர்கள் வாசிக்கும் ஒளிப்படங்களும் டிரெண்ட் ஆகி வருகின்றன.

மஞ்சணத்தி: இளையராஜாவே கதாநாயகன்!
Chandlo - கதவற்ற கூண்டுகளும், சிறகை விரிக்காத மீராக்களும் | திரை தேவதைகள் 34

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in