‘‘கார்த்திக் சுப்புராஜின் திரை மொழி வியக்க வைக்கிறது’’ - ‘டோரதி’க்கு மணிரத்னம் பாராட்டு

‘‘கார்த்திக் சுப்புராஜின் திரை மொழி வியக்க வைக்கிறது’’ - ‘டோரதி’க்கு மணிரத்னம் பாராட்டு
Updated on: 
1 min read

‘‘கார்த்திக் சுப்புராஜ் ஒரு தனித்துவமான இயக்குநர்; அவரின் திரை மொழி வியக்க வைக்கிறது’’ என இயக்குநர் மணிரத்னம் பாராட்டியுள்ளார்.

காரத்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘டோரதி’ படத்தை பாராட்டி இயக்குநர் மணிரத்னம் கருத்து தெரிவித்துள்ளார். அதனை கார்த்திக் சுப்புராஜின் தம்மம் பிலிம்ஸ் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

‘டோரதி’ பற்றிய இயக்குநர் மணிரத்னத்தின் கருத்து எனக் கூறி பகிர்ந்துள்ள வீடியோவில் மணிரத்னம், ‘கார்த்திக் ஒரு சிறந்த திறமைசாலி. தமிழ் திரை உலகுக்கு அவர் ஒரு பெரிய பலம்.

நம்பிக்கை தரும் இளைஞர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களில் கார்த்திக் முன்னணியில் இருக்கிறார் என நான் கருதுகிறேன். ‘டோரதி’ மிகச் சிறந்த படம். அவரின் திரை மொழி சிறப்பாகவும், ஈர்க்கும் விதமாகவும், வியக்க வைப்பதாகவும் உள்ளது.

காட்சிகள், திரை மொழி, தொழில்நுட்பத்தை அவர் கையாளும் விதமும் சிறப்பாக உள்ளது. அதனுடன் இளையராஜாவின் இசையும் இணையும்போது, அது ஆகச் சிறந்ததாக மாறி விடுகிறது. கார்த்திக் சுப்புராஜுக்கு எனது வாழ்த்துகள்’ என்று மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் 10-வது படம் ‘டோரதி’.  இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். கீர்த்தி சுரேஷ், சனத், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் தனது தம்மம்  பிலிம்ஸ் பேனரின் கீழ் தயாரித்திருக்கிறார்.

படத்துக்கு எஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணியை கணேஷ் சிவாவும், சண்டை பயிற்சியை தினேஷ் சுப்புராயனும் மேற்கொண்டுள்ளனர். இந்தப் படம்  செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘‘கார்த்திக் சுப்புராஜின் திரை மொழி வியக்க வைக்கிறது’’ - ‘டோரதி’க்கு மணிரத்னம் பாராட்டு
“நான் அன்று அழுதேன்...” – ‘வாரணாசி’ பட நிகழ்வு குறித்து ராஜமவுலி மகன் உருக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in