ரூ.100 கோடியை கடந்தது சூரியின் ‘மண்டாடி’ வசூல்!

ரூ.100 கோடியை கடந்தது சூரியின் ‘மண்டாடி’ வசூல்!
Updated on
1 min read

சூரியின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மண்டாடி’ படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ‘மண்டாடி’ வகையராவுக்கு இது பிரம்மாண்டமான வெற்றியின் நாள். இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் படமான ‘மண்டாடி’ படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது.

அனைத்து சென்டர்களிலும் வெற்றி, அனைத்து பகுதிகளிலும் வெற்றி, மக்களின் மகத்தான வெற்றி’ என்று தெரிவித்துள்ளது.

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரியின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘மண்டாடி’. இந்தப் படம் செப்டம்பர் 10-ம் தேதி திரை அரங்குகளில் வெளியானது.

ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

பாய்மரப்படகு போட்டியின் பின்புலத்தில் கடலோர மக்களின் வாழ்க்கை பாரம்பரியம், உணர்வுகள், அவர்களின் மன உறுதியை மையமாகக் கொண்டு வந்திருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்போது வசூல் ரீதியாகவும் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.

ரூ.100 கோடியை கடந்தது சூரியின் ‘மண்டாடி’ வசூல்!
‘டோரதி’ முதல் ‘தி பாரடைஸ்’ வரை: இந்த வார தியேட்டர் ரிலீஸ் பட்டியல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in