‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு
Updated on
1 min read

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார்.

இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஸினிமா மீடியா சார்பில் தினேஷ் ராஜ், கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இன்றைய இளைஞர்களின் உணர்வுகளை நவீன கோணத்தில், மனதைத் தொடும் வகையில் சொல்லும் காதல் கதையை கொண்ட இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு
Bulbbul: பலீவனப்படுத்தும் சமூகத்தைப் பந்தாடும் புல்புல் | திரை தேவதைகள் 15

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in