லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ வசூல் நிலவரம் என்ன?

உலக அளவில் 4 நாளில் ரூ.50 கோடி!
லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ வசூல் நிலவரம் என்ன?
Updated on
1 min read

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமான ‘டிசி’ படம் வெளியான 4 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) திரையரங்குகளில் வெளியாகி பரவலான கவனம் பெற்று வரும் ‘டிசி’ படம் வசூல் ரீதியாகவும் வெற்றி ஈட்டி வருகிறது.

வெளியான முதல் நாளில் ரூ.5.25 வசூல் செய்திருந்த படம், நான்காவது நாளான திங்கள்கிழமை ரூ.6.50 வசூல் செய்திருக்கிறது. இது படத்தின் முதல் நாள் வசூலை விட 23 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் அருண் மாதேஸ்வரனின் இந்தப் படம் வரவேற்பை பெற்று நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இந்தநிலை தொடரும் பட்சத்தில் ‘டிசி’ படம் இந்த வார இறுதிக்குள் ரூ.40 கோடி வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘டிசி’ படம் பாக்ஸ் ஆஃபிஸில் அமோக வெற்றி பெற்று வருவதாகவும், நான்கு நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடி வசூல் செய்திருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் ‘டிசி’ படத்தில் அவருடன் வாமிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முகேஷ் ஒளிப்பதிவில், அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம்  வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ வசூல் நிலவரம் என்ன?
“எஸ்ஐஆர் மூலம் என் பெயரும் நீக்கம்” – பிரகாஷ் ராஜ் பகிர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in