

‘சிறை' படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் எல்.கே. அக் ஷய் குமார், அடுத்து நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்குகிறார். இதை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்கிறார்.
இதில் ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன், ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். ‘ஃபன் என்டர்டெய்னராக’ தயாராகும் இந்தப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தமிழ், மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தைக் கோடை விடுமுறையில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.