ஜவ்வாது மலை பின்னணியில் ‘கொலைச்சேவல்’

ஜவ்வாது மலை பின்னணியில் ‘கொலைச்சேவல்’
Updated on
1 min read

கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘கொலைச்சேவல்’. இதில் பால சரவணன், அகரன் வெங்கட், ஆதவன், கஜராஜ் என பலர் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சாந்தன் இசை அமைத்துள்ளார்.

ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் வி.ஆர்.துதிவாணன் இயக்கியுள்ளார். ஜவ்வாது மலைப் பின்னணியில் உருவாகியுள்ள காதல் படமான இது, சமுதாயத்துக்குத் தேவையான ஒரு விஷயத்தைப் பேசுகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படம் மார்ச் 13-ம் தேதி வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.எழுத்தாளர் இமையம் எழுதிய ‘கொலைச்சேவல்’ கதைக்கும்

இந்தப் படத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் இத்தலைப்பு இப்படத்தின் கதைக்குப் பொருத்தமாக இருந்ததால், அவரிடம் அனுமதி வாங்கி பயன்படுத்தி இருப்பதாகவும் தயாரிப்பாளர் ஆர்.பி.பாலா தெரிவித்துள்ளார்.

ஜவ்வாது மலை பின்னணியில் ‘கொலைச்சேவல்’
மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் போட்டி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in