விரைவில் அப்டேட்; எந்தவித பிரச்சினையும் இல்லை: ‘கருப்பு’ இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி

விரைவில் அப்டேட்; எந்தவித பிரச்சினையும் இல்லை: ‘கருப்பு’ இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
Updated on
1 min read

விரைவில் அப்டேட் உடன் சந்திக்கிறேன், எந்தவித பிரச்சினையும் இல்லை என்று ‘கருப்பு’ இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

‘கருப்பு’ படம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் கடந்த சில நாட்களாக இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. மேலும், நேற்றைய டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது “ரச்சின் ரவீந்திராவையே ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி ரிலீஸ் செய்துவிட்டது. ஆனால், நான் எடுத்த படம் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை” என்று கூறியிருந்தார் ஆர்.ஜே.பாலாஜி. இதனை முன்வைத்து பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டு வந்தன.

இது அனைத்துக்கும் பதிலளிக்கும் விதமாக ‘கருப்பு’ இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”’கருப்பு’ படத்தின் வேலையை மீண்டும் ஆரம்பிக்கிறோம். இதையே தான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சூர்யா சாருடைய ரசிகர்கள் வேதனையில் இருக்கிறீர்கள் என்று தெரியும். இந்த காத்திருப்பு பதிலளிக்கும் விதமாக படம் இருக்கும்.

நானும் இரண்டு வருடங்களாக இப்படத்தில் பணிபுரிந்துக் கொண்டிருக்கிறேன். நானும் இனி நிறைய நேரம் எடுத்துக் கொள்கிற எண்ணத்தில் இல்லை. இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் படம் எப்போது ரிலீஸ் என்ற அப்டேட் உடன் உங்களை சந்திக்கிறேன். கண்டிப்பாக ஏப்ரல் 10-ம் தேதி வெளியீடு இல்லை.

எனக்கும் தயாரிப்பாளர் பிரபுவுக்கும் சண்டை, இருவரும் சண்டையிடுவது மாதிரி வீடியோ, அவர் மீது வழக்கு தொடுக்க இருப்பது, இசையமைப்பாளருடன் சண்டை, தயாரிப்பாளருக்கும் தயாரிப்பாளருக்குமே சண்டை என நிறைய விஷயங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் எல்லாம் கடுப்பில் இருக்கிறீர்கள், ரொம்ப நாள் காத்திருப்பு உங்களை வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது என தெரிகிறது. படம் எப்போது என்ற தகவலுடன் உங்களை ஒரு 10 நாட்களுக்குள் சந்திக்கிறேன். உங்கள் அனைவருக்குமே இப்படம் ரொம்ப பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

விரைவில் அப்டேட்; எந்தவித பிரச்சினையும் இல்லை: ‘கருப்பு’ இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் உணவகங்கள் மூடல்: பெங்களூரு உணவக சங்கம் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in