

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிதிருக்கும் ‘சர்தார் 2’ படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
கார்த்தி நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகமான இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியானது.
போர் விமானங்கள் பறக்க, ‘அமைதி... அமைதி...’ என ஒலிக்கிறது. அது எஸ்.ஜே. சூர்யாவின் குரல். தொடர்ந்து துப்பாக்கிகள் முழங்க, வெடிகுண்டுகள் வெடிக்கின்றன. அவர் தந்தை - மகன் பற்றிய கதை சொல்கிறார்.
அவர்கள் இருவரும் தன்னைத் தேடுவதாக கூறி, அவர் சொல்லும் கதைக்கும், வரவிருக்கும் படத்துக்கும் ‘ஹைப்’ ஏற்றுகிறார். கிராமத்து கலைஞர், கூத்து, உளவாளி போன்ற காட்சிகள் அந்த ஹைப்பை இன்னும் அதிகப்படுத்துகின்றன.
இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். படம் செப்டம்பர் 10-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.