“என்னை யாரும் ஓய்வெடுக்கச் சொன்னதில்லை” - கமல்ஹாசன் தகவல்
நடிகர் கமல்ஹாசன், ‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதை அவருடைய ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கமல்ஹாசனிடம் இன்றைய தலைமுறையினர் புதிய கூட்டணியை எதிர்பார்ப்பதால் மூத்த நடிகர்கள் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில அளித்த கமல், “புதிய கூட்டணிகள் உருவாக வேண்டும் என்பது முக்கியம். பழைய விஷயங்களுக்கு ஓய்வு கொடுப் பதை ரசிகர்களே கவனித்துக் கொள்வார்கள். ஆனால் பழைய பிரபலங்களை ஓய்வு பெற சொல்வது உங்களின் வேலை. என்னிடம் யாரும் இதுவரை ஓய்வெடுக்கச் சொன்னதில்லை.
ஆனால் மோசமான படங்களில் நடிக்கும்போது, ஓய்வு பெற வேண்டும் எனத் தோன்றும். அப்போது என் நண்பர்கள், ‘இதோடு நிறுத்தாதே... நல்ல படம் செய்துவிட்டு, பின்பு ஓய்வு எடு’ என்று சொல்வார்கள். நான் இன்னும் அப்படிப்பட்ட ஒரு நல்ல படத்தை தான் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
