தணிக்கை சான்​றிதழ் வழங்க காலக்​கெடு: கமல்​ஹாசன் கோரிக்கை

தணிக்கை சான்​றிதழ் வழங்க காலக்​கெடு: கமல்​ஹாசன் கோரிக்கை
Updated on
1 min read

விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்​துக்​கான தணிக்​கைச் சான்​றிதழ் விவ​காரம் இப்​போது நீதி​மன்​றத்​தில் உள்​ளது. ‘பராசக்​தி’ படத்​துக்​கும் ஏராள​மான திருத்​தம் மற்​றும் ‘கட்​’களுக்கு பிறகு​தான் தணிக்கை சான்​றிதழ் கிடைத்​துள்​ளது.

இதனால் கடுமை​யான விமர்​சனங்​களை தணிக்கை வாரி​யம் எதிர்​கொண்​டிருக்​கும் நிலை​யில் நடிகரும் எம்​.பி​யு​மான கமல்​ஹாசன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய அரசி​யலமைப்பு கருத்து சுதந்​திரத்தை உறுதி செய்​கிறது. அது பகுத்​தறி​வால் வழிநடத்​தப்பட வேண்​டுமே தவிர, தெளிவற்ற தன்​மை​யால் முடக்​கப்​படக் கூடாது. இது எந்த திரைப்​படத்​தை​யும் விடப் பெரியது.

இது, ஜனநாயகத்​தில் கலைக்​கும் கலைஞர்​களுக்​கும் ஓர் அரசியலமைப்பு வழங்​கும் இடத்​தைப் பிர​திபலிக்​கிறது. அதை ஒரு​போதும் தெளி​வின்​மை​யால் குறைக்க முடி​யாது. சினிமா என்பது ஒரு நபரின் படைப்பு மட்​டுமல்ல, எழுத்​தாளர்​கள், தொழில்​நுட்ப வல்​லுநர்​கள், கலைஞர்​கள், மற்​றும் சிறு வணிகங்களின் கூட்டு முயற்​சி​யாகும். அவர்​களின் வாழ்வாதாரத்தையும் சார்ந்​துள்​ளது.

தெளிவு இல்​லாத​போது, படைப்​பாற்​றல் கட்​டுப்​படுத்​தப்​படும், பொருளா​தார செயல்​பாடு தடைபடும், மக்​களின் நம்​பிக்கை பலவீனமடையும். தமிழ்​நாடு மற்​றும் இந்​தி​யா​வில் உள்ள சினிமா ஆர்​வலர்​கள், கலைகள் மீது ஆர்​வம், புரிதல் மற்​றும் முதிர்ச்சியைக் கொண்​டுள்​ளனர்; அவர்​கள் வெளிப்​படைத்​தன்மை மற்​றும் மரி​யாதைக்​குத் தகு​தி​யானவர்​கள்.

இப்​போது தேவைப்​படு​வது, தணிக்கை சான்​றிதழுக்​கான வரையறுக்​கப்​பட்ட காலக்​கெடு, வெளிப்​படை​யான மதிப்​பீடு மற்றும் பரிந்​துரைக்​கப்​படும் ஒவ்​வொரு ‘கட்​’ அல்​லது திருத்​தத்​துக்கு எழுத்​துப்​பூர்​வ​மான, காரணத்​துடன் கூடிய விளக்​கத்​துடன், சான்​றிதழ் வழங்​கும் செயல்​முறை​களை கொள்கை ரீதி​யாக மறுபரிசீலனை செய்​வ​தாகும்.

திரை​யுல​கம் ஒன்​று​பட்டு இது தொடர்​பாக அர்த்​த​முள்ள, ஆக்கபூர்வ​மான உரை​யாடலில் ஈடுபட வேண்​டிய தருண​மும் இது​தான். இது​போன்ற சீர்​திருத்​தங்​கள் படைப்பு சுதந்​திரத்​தைப் பாதுகாக்​கும். அரசி​யலமைப்பு மதிப்​பு​களை வலுப்​படுத்​தும். கலைஞர்​கள் மற்​றும் மக்​கள் மீதான நம்​பிக்​கையை உறுதிப்படுத்து​வதன் மூலம் இந்​தி​யா​வின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்​படுத்​தும். இவ்​வாறு கமல்​ஹாசன்​ தெரிவித்துள்​ளார்​.

தணிக்கை சான்​றிதழ் வழங்க காலக்​கெடு: கமல்​ஹாசன் கோரிக்கை
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: திமுக பிரமுகர் உட்பட 15 பேர் மீது வழக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in