கே.பாக்யராஜின் கடைசி படம் ‘கன்னடத்து பைங்கிளி’

கே.பாக்யராஜின் கடைசி படம் ‘கன்னடத்து பைங்கிளி’
Updated on
1 min read

ஓசூரில் 1990-களில் நடை​பெற்ற உண்​மைச் சம்​பவத்​தின் அடிப்​படை​யில் உரு​வாகி​யுள்ள திரைப்​படம், ‘கன்னடத்து பைங்கிளி’.

இதில் புது​முகங்​கள் அமல் அஜித், ஆதி​யா, சிங்​கம் புலி, புகழ், ஆதவன், ஜீவா உள்​ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்துள்​ளனர். இதை சிங்​கம் புலி, மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்​களை இயக்​கிய சாய் ரமணி இயக்​கி​யுள்​ளார். இதில் கே.பாக்யராஜ் முக்​கிய வேடத்​தில் நடித்​துள்​ளார்.

டி.​ராஜேந்தர் பாடல்​களை எழுதி இசையமைத்​துள்​ளார். எம்​.பி.எம். என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் இந்​து​மதி கோபி தயாரித்​துள்​ளார். எஸ்​.ஆர். சதீஷ் குமார் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

இப்​படம் பற்றி பேசிய இயக்​குநர் சாய்​ரமணி, ‘‘பாக்யராஜின் திடீர் மறைவு எங்​களை அதிர்ச்​சி​யிலும் சோகத்​தி​லும் ஆழ்த்​தி​யுள்​ளது. படப்​பிடிப்​பின் கடைசி நாளன்று பாக்​ய​ராஜ் மற்​றும் டி.ராஜேந்தரை வைத்து பத்​திரி​கை​யாளர் சந்​திப்பை நடத்​தலாம் எனத் திட்ட​மிட்​டிருந்​தோம். ஆனால், அன்​றைய தினம் பாக்யராஜுக்​கான அஞ்​சலி நிகழ்ச்​சியை நடத்த வேண்​டிய சூழல் ஏற்​பட்டு​விட்​டது. 80 மற்​றும் 90-களில் பிரபல​மாக இருந்த இரு​வரும் இணைந்து பணி​யாற்​றிய முதல் படம் இது.

‘கன்​னடத்து பைங்​கிளி’ படத்​தில் தனது பகு​தி​கள் அனைத்​தை​யும் பாக்​ய​ராஜ் சிறப்​பாக முடித்​துக் கொடுத்​தார். சில க்ளோஸ்​-அப் காட்​சிகள் மட்​டுமே படமாக்க வேண்டி இருந்​தது. அதை ஏ.ஐ.மூலம் உரு​வாக்க உள்​ளோம். சுமார் 35 ஆண்​டு​களுக்​குப் பிறகு பாக்​ய​ராஜும் அவரது மனைவி பூர்​ணி​மா​வும் இணைந்து நடித்த படமும் இது​தான். கணவன்​-மனை​வி​யாகவே நடித்துள்ளனர்” என்​றார்.

கே.பாக்யராஜின் கடைசி படம் ‘கன்னடத்து பைங்கிளி’
முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு தொகை ரூ.25 லட்சமாக உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in