

அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் முனீஷ்காந்த் நடிக்கும் படத்துக்கு ‘ஜுமாக்கா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், விவேக் பிரசன்னா, கல்கி, ஜென்சன் திவாகர், வினோத் முன்னா, அனன்யா ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதை ஜே.பி.சினிமாஸ் சார்பில் ஜெயக்குமார், ப்ரீத்தி தயாரிக்கின்றனர்.
ஃபேன்டஸி காமெடி படமான இதன் கதை, பழமையான கேமரா ஒன்றை மையப்படுத்தியது. ஸ்ரீதர் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு ஆனந்த் காசிநாத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நிறைவு பெற்றது. இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டரை விஜய் ஆண்டனி தனது சமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.