

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
விவேக் எழுதியுள்ள இப்பாடலில் இடம்பெற்றுள்ள "ஒரு பேரே வரலாறு.. அந்தப் பேரைச் சொன்னால் அதிரும் ஊரு" போன்ற வரிகள் விஜய்யின் மாஸ் அந்தஸ்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன.
”நம்ம மக்கள் நினைக்காம, ஒரு மாற்றம் பிறக்காது” என்ற வரி விஜய்யின் அரசியலை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளன. விஜய்யின் அடுத்தடுத்த பிரச்சாரக் கூட்டங்களில் இந்த பாடலை எதிர்பார்க்கும் அளவுக்கு வரிகளில் ‘அரசியல்’ தெறிக்கிறது.
ஏற்கனவே விஜய் - அனிருத் கூட்டணி 'கத்தி', 'மாஸ்டர்', 'லியோ' எனப் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ள நிலையில், மீண்டும் 'ஜனநாயகன்' மூலம் அதே மேஜிக்கை நிகழ்த்தியுள்ளதா என்பது மீதமிருக்கும் பாடல்களும் வெளியான பிறகு தெரியும்.