‘ஜெயிலர் 2’ அப்டேட்: கவுரவ கதாபாத்திரத்தில் ஷாரூக்கான்

‘ஜெயிலர் 2’ அப்டேட்: கவுரவ கதாபாத்திரத்தில் ஷாரூக்கான்
Updated on: 
1 min read

’ஜெயிலர் 2’ படத்தில் ஷாரூக்கான் கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதை மிதுன் சக்கரவர்த்தி உறுதிப்படுத்தி இருக்கிறார்.

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர் 2’. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து ஷாரூக்கானும் நடிக்கவிருப்பதை மிதுன் சக்கரவர்த்தி பேட்டியொன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இந்தப் பேட்டியினை முன்வைத்து காலை முதல் ‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாரூக்கான் நடிக்கவிருப்பதாக இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் படக்குழுவினர் சார்பில் இதுவரை எந்தவொரு தகவலுமே உறுதிப்படுத்தப்படவில்லை. ஜனவரிக்குள் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்துள்ள அனைவருமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் இப்படம் உருவாகி வருகிறது. ‘ஜெயிலர் 2’ படத்துக்குப் பிறகு ரஜினியை யார் இயக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், அப்படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

‘ஜெயிலர் 2’ அப்டேட்: கவுரவ கதாபாத்திரத்தில் ஷாரூக்கான்
தணிக்கை பிரச்சினையில் சிக்கியுள்ள ‘பராசக்தி’

X