

சிவகார்த்திகேயன்
‘பராசக்தி’ படத்தினைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘பராசக்தி’. இதன் தணிக்கைப் பணிகளை சில தினங்களுக்கு முன்பு தொடங்கினார்கள். இப்படத்தினைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.
1960-களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி ‘பராசக்தி’ உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தான் தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி கூறியிருக்கிறார்கள். இதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்து, மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த தணிக்கை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிகிறது.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவி கே சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.