ஜெய் - பிரியங்கா மோகன் கூட்டணி!

ஜெய் - பிரியங்கா மோகன் கூட்டணி!
Updated on
1 min read

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொடங்கி புதுவரவாகக் கவரும் அறிமுக நாயகிவரை தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளுடன் நம்பகமான ‘கெமிஸ்ட்ரி’யை உருவாக்கிவிடுவார் நடிகர் ஜெய்.

இந்த வருடம் ‘பிளாஸ்ட்’ என்கிற அட்டகாசமான வெற்றியைக் கொடுத்த ஏ.ஜி.எஸ். நிறுவனம், அடுத்துத்தயாரிக்கும் 29வது படத்தில்தான் ஜெய்யும் பிரியங்கா மோகனும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை எம்.எஸ்.ஆனந்தன் எழுதி, இயக்குகிறார். இவர் விஷால் நடித்த 'சக்ரா' படத்தை இயக்கியவர். படம் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது: “ஜெய் - பிரியங்காவின் காதலைச் சுற்றி நடக்கும் ஆக்‌ஷன் கதை இது. என்றாலும் நகைச்சுவை முக்கியமான பங்கு வகிக்கும்.

ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், அருள் தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். திரைக்கதையின் ஓர் எதிர்பாராத தருணத்தில் உள்ளே வரும் யோகிபாபு கதாபாத்திரம் செய்யப்போகும் மாயம் வேற லெவலில் இருக்கும்.

'கேஜிஎஃப்', 'பிளாஸ்ட்' படங்கள் மூலம் பிரபலமான ரவி பஸ்ரூர் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்” என்றார். இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பொறுப்பேற்றுள்ளார்.

ஜெய் - பிரியங்கா மோகன் கூட்டணி!
ஒரு படைப்புக்கு எப்போது பெருமை? | சுட்ட கதை 43

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in