சிவகார்த்திகேயனை இயக்கும் ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார்?

சிவகார்த்திகேயனை இயக்கும் ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார்?
Updated on
1 min read

சென்னை: சிவகார்த்திகேயனை சந்தித்து கதை ஒன்றை கூறியிருக்கிறார் ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார்.

‘ரஜினி173’ படத்தின் இயக்குநர் ராம்குமார் இல்லை என்பது முடிவாகிவிட்டது. இதனால் அவரது அடுத்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரஜினி படத்துக்கு முன்பாக டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்க படம் ஒன்று பூஜை போடப்பட்டது. ஆனால், அப்படத்தின் பணிகள் தொடங்கப்படாமல் அப்படியே இருக்கிறது.

இதனிடையே, சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவிருந்த சிபி சக்கரவர்த்தி இப்போது ரஜினி படத்தை இயக்கவுள்ளார். அதேபோல் ரஜினி படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்த ராம்குமார், இப்போது சிவகார்த்திகேயனை சந்தித்து கதை ஒன்றை கூறியிருக்கிறார். இதனை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்திருப்பதாக தெரிகிறது.

அதுமட்டுமன்றி சிம்புவும் ராம்குமாருக்கு தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறார். டான் பிக்சர்ஸ் அப்படத்தை தயாரிக்கவில்லை என்றால் நாம் வேறொரு தயாரிப்பாளரை வைத்து அந்தப் படத்தை தொடங்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் விரைவில் ராம்குமாரின் அடுத்தப் படம் என்னவென்று தெரியவரும்.

சிவகார்த்திகேயனை இயக்கும் ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார்?
வெப் சீரிஸ் நாயகன் ஆகிறார் ‘மாமன்’ இயக்குநர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in