

’ஜனநாயகன்’ ரீமேக் என்று பரவி வரும் தகவல்களுக்கு ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிப்புடி விளக்கமளித்துள்ளார்.
‘பகவந்த் கேசரி’ தமிழ் ரீமேக் தான் ‘ஜனநாயகன்’ என்று தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக ‘பகவந்த் கேசரி’ படத்தின் இயக்குநர் அனில் ரவிப்புடியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு “’ஜனநாயகன்’ விஜய் சார் படம் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். எனவே படம் வெளியாகும் வரை அப்படித் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
விஜய் சாருடைய கடைசிப் படத்தில் எனக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா என்பது படம் திரைக்கு வந்த பின்பு தான் தெரியும். ‘வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் விஜய் சாரை சந்தித்து பேசியிருக்கிறேன். அவர் ஒரு அற்புதமான மனிதர்” என்று தெரிவித்துள்ளார் அனில் ரவிப்புடி.
ஜனவரி 2-ம் தேதி ‘ஜனநாயகன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. அதன் மூலம் இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என தெரிகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.